அக்டோபர் 05, 2008

Daylight Savings - What does it mean?

Ulagathukku time set pannum daylight savings pattri konjam.

செப்டம்பர் 19, 2008

செப்டம்பர் 18, 2008

ஆஸ்திரேலியா கண்டம்

தலைப்பின் பின்பாதி பேச்சு வழக்கில் உள்ள வார்த்தை.


படித்து முடித்து வேலை செய்து

பின்னர் மாணவனாக நியமனம் பெற்றேன்

நல்ல குளிர்காற்று வீசிய நேரம்

அயல்நாட்டில் காலடி எடுத்து வைத்தேன்


புதிய இடம், மனிதர்கள், சூழ்நிலை

எங்கு சென்றாலும் உடை அலங்காரம்தான்

கை, காது, நரம்புகள் உள்பட

குளிர்காற்றை சுவாசித்தன


முதல் முறையாக நெடுந்தூர

விமானப்பயணம் நித்திரையோடு

கழிந்தது பதினாறு மணிநேரமும்


பல்கலைகழகத்தில் புது மாணவனாக

சேர்ந்து ன்ன பிற வேலைகள்

முடித்தபின் ஆரம்பம் ஆனது

வீடு தேடும் படலம்


பின்னர் நண்பனின் உதவியால்

ஊருக்கு வெளியே ஓர் இடம்

கிடைத்தது அதுவும் ஒரு

கல்வி ஆசிரியர் வீடு


காலையும் மாலையும் ஒரு

மணி நேரம் பயணம்

பல்கலைகழகம் சென்று வர....

Meendum Varuvoam.

ஆகஸ்ட் 28, 2008

நிமிடங்கள் அல்ல நாட்கள் ஓடி விட்டது மின்மொழியில் உரையாடி மகிழ்ந்து. நிறைய நல்ல விஷயங்கள் நடந்துள்ளது இந்த சிறிய இடைவெளியில். அவற்றில் சில துளிகள்:

அப்பா, அம்மா, அண்ணன் மற்றும் உறவினர்கள் அனைவரும் கொடைக்கானல், மதுரை, திருப்பூர், கோவை, திருவண்ணாமலை, திருக்கோவிலூர் என பல இடங்களுக்கு சுற்றுலா சென்று வந்தது.

மேல்படிப்பு படிக்க ஆஸ்திரேலியா செல்ல அனுமதி சீட்டு கிடைத்தது.

அண்ணன் மகள் ஓவியா செய்த குறும்பு தனங்கள் இன்னும் மனதில் உள்ளது.

இது தவிர எங்கள் ஐவரில் ஒருவர் வெளிநாடு, மற்றொருவர் வெளிமநிலத்திற்கு இடம் பெயர்ந்தோம்.

படித்து முடித்து ஐந்து வருடங்கள் கழித்து அடுத்த கட்டத்தை நோக்கி நாங்கள் பயணம் செய்கிறோம்.

ஜூலை 06, 2008

பத்து நாட்கள் அல்ல ஆறு மாதங்கள் ஓடி விட்டன. இதோ அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி, என் செல்ல ராஜகுமாரி ஓவிய அனைவரும் செவ்வாய் காலை சென்னை வந்து இறங்குகிறார்கள்.

மாதங்கள் முடிந்து,

வாரங்கள் தாண்டி,

நாட்கள் விரைந்து,

நிமிட நேரங்கள்

நோக்கி நகர்ந்து

செல்கிறது உலகம்.

ஜூலை 04, 2008

ஒரு நாள் பயணம்

சென்ற வாரம் சனிக்கிழமை நான் வேலை செய்யும் நிறுவனத்தில் எல்லோரும் ஒரு நாள் பயணமாக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ப்ளூ லகூன் புகலிடம் சென்று வந்தோம்.

கைப்பந்து, பூப் பந்தாட்டம், திறந்தவெளி ஆட்டம் (கிரிக்கெட்), நீச்சல் என நன்றாக பொழுதை கழித்தோம். காலைவேளையில் கைப்பந்து மற்றும் பூப் பந்தாட்டமும். கடலில் நீராடியதும் அருமையான சைவ, அசைவ உணவு வகைகள். பின்னர் திறந்தவெளி ஆட்டம் (கிரிக்கெட்). இன்னும் ஒரு முறை நீச்சல் குளத்தில் நீராடியா பின் அனைவரும் வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். என் நிறுவனத்தின் இரு நிர்வாகிகளும் எங்களுடன் கொண்டாடினர்.