ஆகஸ்ட் 28, 2008

நிமிடங்கள் அல்ல நாட்கள் ஓடி விட்டது மின்மொழியில் உரையாடி மகிழ்ந்து. நிறைய நல்ல விஷயங்கள் நடந்துள்ளது இந்த சிறிய இடைவெளியில். அவற்றில் சில துளிகள்:

அப்பா, அம்மா, அண்ணன் மற்றும் உறவினர்கள் அனைவரும் கொடைக்கானல், மதுரை, திருப்பூர், கோவை, திருவண்ணாமலை, திருக்கோவிலூர் என பல இடங்களுக்கு சுற்றுலா சென்று வந்தது.

மேல்படிப்பு படிக்க ஆஸ்திரேலியா செல்ல அனுமதி சீட்டு கிடைத்தது.

அண்ணன் மகள் ஓவியா செய்த குறும்பு தனங்கள் இன்னும் மனதில் உள்ளது.

இது தவிர எங்கள் ஐவரில் ஒருவர் வெளிநாடு, மற்றொருவர் வெளிமநிலத்திற்கு இடம் பெயர்ந்தோம்.

படித்து முடித்து ஐந்து வருடங்கள் கழித்து அடுத்த கட்டத்தை நோக்கி நாங்கள் பயணம் செய்கிறோம்.

கருத்துகள் இல்லை: