செப்டம்பர் 18, 2008

ஆஸ்திரேலியா கண்டம்

தலைப்பின் பின்பாதி பேச்சு வழக்கில் உள்ள வார்த்தை.


படித்து முடித்து வேலை செய்து

பின்னர் மாணவனாக நியமனம் பெற்றேன்

நல்ல குளிர்காற்று வீசிய நேரம்

அயல்நாட்டில் காலடி எடுத்து வைத்தேன்


புதிய இடம், மனிதர்கள், சூழ்நிலை

எங்கு சென்றாலும் உடை அலங்காரம்தான்

கை, காது, நரம்புகள் உள்பட

குளிர்காற்றை சுவாசித்தன


முதல் முறையாக நெடுந்தூர

விமானப்பயணம் நித்திரையோடு

கழிந்தது பதினாறு மணிநேரமும்


பல்கலைகழகத்தில் புது மாணவனாக

சேர்ந்து ன்ன பிற வேலைகள்

முடித்தபின் ஆரம்பம் ஆனது

வீடு தேடும் படலம்


பின்னர் நண்பனின் உதவியால்

ஊருக்கு வெளியே ஓர் இடம்

கிடைத்தது அதுவும் ஒரு

கல்வி ஆசிரியர் வீடு


காலையும் மாலையும் ஒரு

மணி நேரம் பயணம்

பல்கலைகழகம் சென்று வர....

Meendum Varuvoam.

கருத்துகள் இல்லை: