டிசம்பர் 08, 2008

ஒரு நாள் இனிய பயணம்

அவசரகதியாக முடிவு செய்த ஓர் இனிய உதயம்
புதிய நட்பு வட்டங்களுடன் மேலும் மெருகூட்ட
உருவான ஒரு சந்தர்ப்பம்

ஆனால் மழை மேகம் எங்களை ஏமாற்றி விட்டது 
காலையில் வெயில் மதியம் குளிர்காற்று
அருமையாக இருந்தது பயணம் சென்ற நகரம்

காலாற நடை
கப்பலில் ஊர்வலம்
பசியாற உணவுவிடுதி
கடலோர கைப்பந்து
குழந்தைகளின் நீச்சல்குளம்
குதூகலிக்க நீர்த்தேக்கம்

எமது நாட்டு புதுச்சேரி போல்
வளர்ந்து வரும் கடலோர நகரம்
அங்கே சென்று வாழ்ந்தால் 
ஆஸ்திரேலிய குடிஉரிமை பெறுவதற்கு 
எண்கள் சேர்க்கலாம்

ஒரு நாள் பயணமாக சென்று வரலாம்
வெயில் காலமாக இருந்தால் நீச்சல் அடிக்கலாம் 
மிதிவண்டி இருந்தால் ஊரே கிரிவலம் சுற்றலாம்
எரிசக்தி வாகனமாக இருந்தால் இன்னும் சுலபம்தான்

ஆனால்

வாகனத்தை ஊட்டி செல்ல ஒருவர் வேண்டும்
அப்பொழுதுதான் பயணம் இனிமையாக இருக்கும் இல்லையேல்
அதிகாலையில் செல்ல தயாராக வேண்டும்

கருத்துகள் இல்லை: